தர்மபுரி, ஆக. 24: தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று நடந்த பெட்டிஷன் மேளாவில் 102 புகார் மனுக்கள் மீது உடனே தீர்வு காணப்பட்டது. தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், நேற்று மாவட்ட போலீஸ் எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் பெட்டிஷன் மேளா நடந்தது. ஏடிஎஸ்பி இளங்கோவன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில், மாவட்டம் முழுவதும் 31 காவல் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்னை, குடும்ப தகராறு, ஊர் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மொத்தம் 102 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, 102 மனுக்கள் மீது விசாரணை முடித்து வைக்கப்பட்டது. இம்முகாமில் டிஎஸ்பி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, சரவணன், செந்தில்குமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.