போடி, நவ.28: போடியைச் சேர்ந்தவர் மனோகரன் (66). இவர் அண்ணா நகர் மேற்கு தெருவில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று முன் தினம் காலை கடையை திறப்பதற்காக சென்றார். அப்போது ஷட்டரில் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாவில் இருந்த பணம் ரூ.3,500 மற்றும் பீடி, சிகரெட் பண்டல்கள் திருடப்பட்டது தெரியவந்தது. நள்ளிரவில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்து பணம், பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரில் நகர் காவல் நிலைய எஸ்.ஐ குரு கவுதம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
பெட்டிக்கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு
0