உளுந்தூர்பேட்டை, ஜூன் 4: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆரியநத்தம் மற்றும் கூ.கள்ளக்குறிச்சி கிராமங்களில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வரும் ஏழுமலை (37) மற்றும் கொளஞ்சி முத்து (31) ஆகிய இருவரின் பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்ததையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பெட்டிக்கடைகளுக்கு மொத்த விற்பனை செய்து வந்த தியாகதுருகம் பகுதியை சேர்ந்த சங்கர் (25) என்பவரையும் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 98 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து உளுந்தூர்பேட்டை சிறையில் அடைத்தனர்.
பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
0
previous post