நீடாமங்கலம்,மார்ச் 11: நீடாமங்கலம் அருகில் உள்ள பூவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாரதிமோகன் தலைமையேற்று நடத்தினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன், பூவனூர் உயர்நிலைப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் முல்லர் செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிச்செல்வி அனைவரையும் வரவேற்றார். உதவி ஆசிரியர் சசிகலா நன்றி கூறினார் .விழாவில் பெரும்பான்மையான பெற்றோர்களும், எஸ்எம்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.