சிவகாசி, ஜூலை 18: பூவநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டப்பட்டது. சிவகாசி அருகே பூவநாதபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் இளங்கோ தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பாட்டுப்போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரை போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காமராஜர் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.