உடுமலை, ஜூலை 5: உடுமலை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் மகிழ் முற்றம் இலக்கிய மன்ற செயல்பாட்டு தொடக்க விழா நடந்தது. தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார். முதுகலை தமிழ் ஆசிரியர் வரவேற்றார். மகிழ் முற்றம் பொறுப்பாசிரியர் ராதா, பள்ளிகளில் பயிலும் மாணவர்களிலேயே கல்வி இணை செயல்பாடுகளை ஊக்குவிக்க மகிழ் முற்றம் தொடங்கப்பட்டு உள்ளது. மாணவர்களின் திறமைகளை வளர்க்கவும், அவர்களின் பன்முக வளர்ச்சியை உறுதி செய்யவும், இலக்கிய மன்ற செயல்பாடுகளும் மகிழ் முற்றம் மன்றமும் செயல்படுகிறது என்பதை எடுத்துக்கூறினார்.
நுகர்வோர் பாதுகாப்பு குறித்து வணிகவியல் ஆசிரியர் அபிதா பேசினார். அறிவியல் மன்றம் மற்றும் வானவியல் மன்றத்தின் செயல்பாடுகளும் மாணவர் பங்களிப்பும் என்னும் தலைப்பில் ஆசிரியர் சுரேஷ்குமார் பேசினார். விலங்கியல் ஆசிரியர் ஜான்பாஷா நன்றி கூறினார். மகிழ் முற்றம் தொடர்பான உறுதி மொழியினை மாணவ, மாணவிகள் ஏற்றுக் கொண்டனர்.