திருத்தணி, ஆக. 29: திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(50) விவசாயி. கிராமத்திற்கு அருகில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள ஆழ்துளை கினற்றில் மோட்டாருக்கு செல்லும் ₹20 ஆயிரம் மதிப்புள்ள 400 மீட்டர் காப்பர் வயரை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு வெட்டி திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விவசாயி அளித்த புகாரின் பேரில் கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மின் மோட்டாருக்கு செல்லும் காப்பர் வயர்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.