பூந்தமல்லி, ஆக. 26: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள மன்ற கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வி.கன்னியப்பன், உமாமகேஸ்வரி சங்கர், டில்லிகுமார், யமுனா ரமேஷ், கே.சுரேஷ் குமார், பத்மாவதி கண்ணன், பிரியா செல்வம், ஜெய்ஸ்ரீ மகா, சத்யப்ரியா முரளி கிருஷ்ணன், சிவகாமி சுரேஷ், எம்.கண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பேசியதாவது: என்.பி.மாரிமுத்து: நேமம் ஊராட்சியில் சுமார் ரூ.1.50 கோடி மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணியினை விரைவில் தொடங்க வேண்டும். மேலும் அம்மன் கோயில் தெரு, ஈஸ்வரன் கோயில் தெரு ஆகியவற்றில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே இதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார். கே.ஜி.டி.கௌதமன்: மழை காலம் தொடங்கி இருப்பதால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்குகிறது. எனவே இதனை சீர் செய்ய கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.