கிருஷ்ணகிரி, ஆக.19: கிருஷ்ணகிரியில், ராயக்கோட்டை சாலையில் ஆனந்த் நகரில் உள்ள தனியார் பள்ளி அருகே வசித்து வரும் துரைசாமி- சுதா தம்பதியினரின் வீட்டில், நேற்று முன்தினம் இரவு, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூத்து குலுங்கியது. ஒரே செடியில் 7 பூக்கள் இதழ் விரித்தது. இதுகுறித்த தகவலறிந்த அப்பகுதி மக்கள், பூக்களை அதிசயத்துடன் பார்த்துச் ெசன்றனர். அப்போது சிலர் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.