தேனி, மார்ச் 13: தேனி அருகே பூதிப்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாக தேனி போதை தடுப்பு அமலாக்கப்பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டதில் இப்பகுதியை சேர்ந்த ராஜபிரபு, செல்வராணி, வீரலட்சுமி, மகாலிங்கம் ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.இதனையடுத்து விற்பனைக்காக வைத்திருந்த 180 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், விற்பனையில் ஈடுபட்ட வீரலட்சுமி மற்றும் மகாலிங்கம் ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜபிரபு மற்றும் செல்வராணி ஆகியோர் தலைமறைவு ஆனதையடுத்து, அவர்களை தேடி வருகின்றனர்.
பூதிப்புரத்தில் பள்ளி அருகே கஞ்சா விற்ற பெண் கைது
0
previous post