தஞ்சாவூர், நவ.5: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பூதலூர் வட்டம் கோட்டரப்பட்டிகிரா மத்திற்கு பேருந்து வசதியைதஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மற்றும் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் கொடியசை த்து தொடங்கி வைத்தனர். தமிழக முதல்வர் உத்தரவின்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் வழிக்காட்டுதலின்படியும், கோட்டரப்பட்டி பள்ளி, மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம் சார்பில், தஞ்சாவூர்-2 கிளை மூலம் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் நகர தடம் எண்-பி 27 காலை மற்றும் மாலை நேரங்களில் தொண்டராயன்பாடி வழியாக கோட்டரப்பட்டி வரை தட நீட்டிப்பு செய்து இன்று (நேற்று) முதல் இயக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் உத்தரவிற்கிணங்க, பொதுமக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் இப்பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அரசின் இதுபோன்ற சிறப்பான திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்கிறோம் என தஞ்சாவூர் நாடாளு மன்ற உறுப்பினர் முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் ஆகியோர் கேட்டுகொண்டனர். கோட்டரப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர் கல்லணை செல்லக்கண்ணு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் தரன், துணை மேலாளர் (வணிகம்) தமிழ்செல்வன், கிளை மேலாளர் ரமேஷ், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.