ஈரோடு, ஜூன் 25: ஈரோடு மாவட்டம், பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இன்று (25ம் தேதி) முதல் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி நடைபெறவுள்ளது. மின்னணு ஏல முறையில் நடைபெறும் இந்த பருத்தி ஏலத்தில் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்ட வணிகர்கள் அதிக அளவில் பங்கேற்கவுள்ளதால் பருத்தி விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.
கொள்முதல் செய்யப்படும் பருத்திக்கான தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். விவசாயிகள் தாங்கள் ஏலத்துக்குகொண்டுவரும் பருத்தியை நன்கு உலர்த்தி, சருகுகள் நீக்கி, ரகம் வாரியாக பிரித்து, சாக்கில் கட்டி, ஏலத்துக்கு கொண்டு வரவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, 04256 227070, 9842434624 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.