தர்மபுரி, ஆக.27: தர்மபுரி மாவட்டத்தில் வேளாண்மை துறை சார்பில் 6 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதி உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மட்டுமல்லாது மலை பயிர்களையும் தருவித்து உழவர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில், கடந்த 1ம் தேதி ஒரு கிலோ பூண்டு ₹260க இருந்தது. ஆனால் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு கிலோ பூண்டு ₹300க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து பூண்டு விலை உயர்வால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
பூண்டு விலை தொடர்ந்து உயர்வு
previous post