திண்டிவனம், ஆக. 4: திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (54). இவர் கடந்த 6 மாத காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமானதால் வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை, குடும்பத்தினர் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ரோசணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை
previous post