மண்டபம்: மண்டபம் பேரூராட்சி கடற்கரை பூங்கா, பாம்பன் சாலை நுழைவு பகுதியில் தென்கடலில் அமைந்துள்ளது. இந்த பூங்காவில் நிழலுக்காக சவுக்கு மரங்களும், சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு திடலும் மற்றும் கடலில் சுற்றுலாபயணிகள் குளிக்கும் வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. தென்கடல் அருகே பறந்த நிலப்பரப்பில் ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மண்டபம் பகுதியில் இருந்து பாம்பன் சாலைப் பாலத்திற்கு நுழைவுப் பகுதியில் அமைந்து இருப்பதால் இந்த பகுதியில் வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளை கண்ண கவரும் அளவிற்கு பூங்கா அமைந்துள்ளது.
இதனால் நேற்று ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலுக்கு ஆடி அமாவாசை ஒட்டி அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊர்களுக்கு வாகனத்தில் செல்லும்போது 200க்கும் மேற்பட்ட வாகனத்தில் பக்தர்கள் இந்த பூங்காவிற்கு வந்து குவிந்தனர். அங்கு பறந்த கடல் பறப்பை பார்த்ததும் ஆனந்தத்தில் குளித்து பொழுது போக்கினார்கள். இதனால் கடற்கரைப் பூங்கா பெரிய திருவிழா கூட்டம் போல் நேற்று காட்சியளித்தது.