சென்னை: புழலில் கைதிகளுக்கு துணி துவைக்கும் இயந்திரத்தை சிறைத்துறை உயரதிகாரி நேற்று துவக்கி வைத்தார். சென்னை புழல், கைதிகள் தங்களது உடைகளை இயந்திரம் மூலம் துவைத்து கொள்ளும் வகையில், ஏற்கனவே அனைத்து சிறைகளிலும் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் 15 துணி துவைக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக சென்னை புழல் தண்டனை சிறையில் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குனர் அமரேஷ் பூஜாரி, நேற்று தண்டனை கைதி பிரேம்குமாரை அழைத்து துணி துவைக்கும் இயந்திரத்தை இயக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் அந்த இயந்திரத்தை இயக்கினார். …