மன்னார்குடி, மார்ச் 1; புள்ளமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி ஆண்டு விழா நடந்தது. திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அடுத்த புள்ளமங்கலம் அரசு மேல் நிலை பள்ளியின் ஆண்டு விழா நேற்று முன் தினம் நடந்தது. தலைமை ஆசிரியர் தசரதன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஐவி குமரே சன், தலைமை செயற்குழு உறுப்பினர் அரிச்சந்திரபுரம் செல்வம் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பூண்டி கலைவாணன் எம்எல்ஏ கலந்து கொண்டு கடந்த ஆண்டு நடந்த அரசுப் பொதுதேர்வில் 10ம் மற்றும் 12ம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற 2 மாணவர்களு க்கு தலா அரை பவுன் தங்க நாணயமும், இரண்டாம் இடம் பெற்ற இரண்டு மாணவர்களுக்கு தலா 5 ஆயிரமும், மூன்றாமிடம் பெற்ற 2 மாணவர்களுக்கு தலா 2 ஆயிரமும், மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
நிறைவில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பரமவினோதா சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.