வேப்பனஹள்ளி, மார்ச் 12: வேப்பனஹள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், தற்போது புளி சீசன் தொடங்கியுள்ளது. இதையடுத்து, அப்பகுதிகளில் உள்ள மரங்களிலிருந்து புளி சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மரங்களிலிருந்து சேகரிக்கப்படும் புளியை களத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, காயவைத்து ஓடு நீக்கி சுத்தப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சுத்தம் செய்யப்பட்ட புளி, கிருஷ்ணகிரியில் நடைபெறும் ஏல மார்க்கெட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் புளி, தற்போது தரத்திற்கேற்றவாறு ஒரு கிலோ ₹30 முதல் ₹40 வரை விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
புளி சேகரிக்கும் பணி மும்முரம்
0
previous post