நரசிங்கபுரம், ஜூன் 10: சேலம் மாவட்டம், கெங்கவல்லியைச் சேர்ந்தவர் நசீர். இவரது மனைவி சாஹிரா பானு (45). இவர்களுக்கு ரோஷிதா என்ற மகள் உள்ளார். சாஹிரா பானுவுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் நசீர் அழைத்து சென்றார். ஆத்தூர்-பெரம்பலூர் சாலையில் சென்ற போது, நசீருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு, சாலையோர புளியமரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தலையில் அடிபட்டு, சாஹிரா பானு பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த ஆத்தூர் டவுன் போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன், பொக்லைன் மூலம் காரை மீட்டனர். நசீருக்கு கால் முறிவு ஏற்பட்டதால், அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிரிழந்த சாஹிராபானு சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புளியமரத்தில் கார் மோதி பெண் பலி; கணவருக்கு கால் முறிவு
0
previous post