கேடிசிநகர், ஜூன் 17: தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள அரியூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் மதன் (17). இவன் சம்பவத்தன்று சிந்தாமணி பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் மதன் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மதன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து புளியங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புளியங்குடி அருகே பைக் மீது கார் மோதி சிறுவன் சாவு
0