புளியங்குடி, மார்ச் 10: புளியங்குடியில் டிஎம்பி வங்கி மற்றும் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் மீனாட்சி தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கண் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதில் புளியங்குடி, புன்னையாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
முகாமில் கலந்து கொண்ட 102 பேருக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது. 32 பேருக்கு கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை வங்கி மேலாளர் ஆனந்த ராஜன், துணை மேலாளர் கார்த்திக் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர்.