புளியங்குடி,ஆக.26: புளியங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பேரவை கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. வாசு. ஒன்றிய செயலாளர் வேலு தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் வேலாயுதம், மாவட்ட பொருளாளர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கட்டுபாட்டு குழு தலைவரும், திருப்பூர் எம்பியுமான சுப்பராயன், மாநில தலைவர் காசி விஸ்வநாதன், மாவட்ட செயலாளர் இசக்கி துரை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் புளியங்குடி மெயின்ரோடு இரண்டு பகுதிகளிலும் வாறுகால, நடைமேடை அமைக்க வேண்டும். மெயின் ரோட்டில் உள்ள சிதம்பரபேரி ஓடையை சுத்தம் செய்து சமுத்திரகுளத்திற்கு தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டுமென்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் சீனிவாசன் நன்றி கூறினார்.