நன்றி குங்குமம் தோழிபனங்கிழங்கு நம்முடைய பாரம்பரிய உணவு. அது சத்துள்ள உணவு மட்டுமில்லாமல் மருத்துவ பொருளாகவும் பயன்படுகிறது. பனங்கிழங்கு ரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. * பனங்கிழங்கை வேக வைத்து மிளகு, உப்புத்தூள் சேர்த்து சாப்பிடலாம். * இதை நறுக்கி, மாவாக அரைத்து தேங்காய்ப்பால், வெல்லம், ஏலக்காய் சேர்த்துப் புட்டு செய்து சாப்பிடலாம்.* பனங்கிழங்கு மாவுடன் தண்ணீர் சேர்த்து, பிசைந்து அடை செய்தும் உண்ணலாம். இவ்வாறு சாப்பிடும் போது தசைகள் வலுவாகும். * ரத்தப் புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தி, தீவிரம் அடையாமல் தடுக்கும் ஆற்றல் இதற்குண்டு.* இதில் நார்ச் சத்து அதிகமிருப்பதாலே, மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.* விட்டமின் ‘சி’ நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்து, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது.- சு.இலக்குமணசுவாமி, மதுரை.* குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால் வாழை இலை ஓரத்தில் இருக்கும் தண்டிளை ஒரு தண்டு நறுக்கி குழம்பில் போட்டால் உப்பு குறைந்து விடும். எலுமிச்சம் பழங்களின் மீது சிறிது தேங்காய் எண்ணெய் தடவி ஃப்ரிட்ஜில் வைத்தால் அவை நீண்்ட நாட்கள் வாடிப் போகாமல் இருக்கும்.- ஆர்.பூஜா, சென்னை.* தேங்காய் நாரைக் கொண்டு வாஷ்பேஷனைத் தேய்த்துக் கழுவினால் வாஷ்பேனில் படிந்த கறைகள் எளிதில் நீங்கி விடும்.- ரெ.கயல்விழி, வடுகப்பட்டி.* ஜவ்வரிசியை எண்ணெய் விட்டுப் பொரித்துக் கொள்ளவும், மோரில் தேவையான அளவு உப்பைப் போட்டு பொரித்த ஜவ்வரிசியைப் போட்டு சீரகம் சேர்த்து கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு பெருங்காயம் கரைத்து ஊற்றி கடுகு தாளிக்கவும். இந்தப் பச்சடி மிகவும் சுவையாக இருக்கும்.- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி.* அவரைக்காய் பொரியல் செய்யும் போது அத்துடன் சிறிது பால் சேர்த்தால் பொரியல் சுவையாக இருக்கும்.- கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.* சர்க்கரை டப்பாவின் மூடியைச் சுற்றி சிறிது விளக்கெண்ணெய் தடவி வைத்து விட்டால், அதில் எறும்புகள் வராது. வாழை இலையைக் கொண்டு தேய்த்த பின், தோசைக் கல்லில் தோசை வார்த்தால், தோசை மிக எளிதாக, அழகாக எடுக்க வரும்.- எஸ். வளர்மதி, கன்னியாகுமரி.* அரிசி நிறம் பழுப்பு நிறமாக இருந்தால் வேகும் போது அரிசியுடன் சிறிது மோரை விட்டால் அது வெள்ளையாக மாறிவிடும். மிளகாய் பொடி வைத்துள்ள பாட்டிலில் சிறிய துண்டு பெருங்காயத்தைப் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்குக் கெடாமலிருக்கும் வாசனையும் கூடும்.- ஆர். அஜிதா, கம்பம்.* பாத்திரங்களை கழுவி அடுக்கும்போது ஒன்றுக்குள் ஒன்று மாட்டி, எடுக்க சிரமமாக இருக்கும். அந்த பாத்திரங்களை அப்படியே ஃப்ரீசருக்குள் 15 நிமிடம் வைத்து. பின்பு வௌியில் எடுத்து குப்புற தட்டினால் உடனே பிரிந்து வந்து விடும்.- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.* வறுத்த வேர்க்கடலையை நன்கு பொடித்துக் கொள்ளவும். அதனை மசால் வடை மாவுடன் சேர்த்து வடை தயாரித்தால் சுவையாக இருக்கும்.புளியோதரை தயாரிக்கும்போது அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் வறுத்த வேர்க்கடலையை சேர்த்தால் சுவை மிகும்.- ஆர்.பிரபா, திருநெல்வேலி….
புற்றுநோயை தடுக்கும் பனங்கிழங்கு!
previous post