கிருஷ்ணகிரி, ஆக.27: கிருஷ்ணகிரி பழையபேட்டை வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜி மகள் திவ்யா(20). இவர் நீண்ட நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனவேதனையில் இருந்து வந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவலறிந்து வந்த டவுன் போலீசார் அவரது உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புற்றுநோயால் அவதிப்பட்ட இளம்பெண் தற்கொலை
previous post