விகேபுரம். நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் இசக்கி சுப்பையா எம்எல்ஏ இன்று நெல்லைக்கு முதன் முதலாக வருகிறார். இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வரும் அவர், பின்னர் கார் மூலம் நெல்லைக்கு வருகை தருகிறார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு கொடுக்கின்றனர். தொடர்ந்து அவர் நெல்லையில் உள்ள எம்ஜிஆர், அண்ணா, பெரியார் சிலைகளுக்கும், ஜெயலலிதா படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் மாலையில் வள்ளியூரில் நடக்கும் அதிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பற்றியும் கட்சியினர் நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது பற்றியும் பேசுகிறார். தொடர்ந்து நாளை நாங்குநேரியில் நடைபெறும் அதிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பற்றி பேசுகிறார்.