செய்முறை: குக்கரில்
புரோக்கோலியுடன் பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா,
வெங்காயத்தாள், வெங்காயம், 2 கப் அரிசி கழுவிய தண்ணீர், இந்துப்பு சேர்த்து
மூடி 3 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் இதை அரைத்து மீதமுள்ள 2 கப்
அரிசி கழுவிய தண்ணீர், மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், ஆரிகானோ,
பட்டை – கிராம்புத்தூள்,; சிறுதானிய மாவு சேர்த்துக் கரைத்து 10 நிமிடங்கள்
கொதிக்கவைத்து இறக்கவும். எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்துச்
சூடாகப் பருகவும். டயட்டில் இருப்பவர்கள் காலை உணவுக்குப் பதிலாக இந்த சூப்
பருகலாம். விருப்பப்பட்டால், இதனுடன் பிரவுன் பிரெட் சாண்ட்விச்
சேர்த்துக் கொள்ளலாம்.
புரோக்கோலி சூப்
பயன்:
எடையைக் குறைக்கவும், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் உதவும்.