செய்முறை புட் பிராசசரில் நறுக்கிய புரொக்கோலி, காளானை மிக்ஸ்
செய்யவும். அதனுடன் பொடியாய் நறுக்கிய சின்ன வெங்காயம், மிளகுத்தூள்,
சீரகம், உப்பு, மல்லித்தழை ப்ளக்ஸ் ஸீட் பவுடரைச் சேர்த்து கலக்கவும்.
இதில் போதுமான தண்ணீரைச் சேர்த்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். தோசை தவா
காய்ந்ததும், ஒரு கரண்டி அளவு தயார் செய்த கலவையை பேன்கேக் அளவில் ஊற்றி,
எண்ணெயைச் சேர்த்து இருபுறமும் நன்கு வேக விடவும். தக்காளிச் சட்னியுடன்
சுவைக்கவும். குறிப்பு : வைட்டமின் கே, சி, போலிக் அமிலம், நார்சத்து, மாவுச்சத்து புரொக்கோலியில் அதிகம் உள்ளது.
புரொக்கோலி பெப்பர் பேன் கேக்
65
previous post