ஆறுமுகநேரி, ஆக. 11: ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல், பவுலா நகரைச் சேர்ந்தவர் அனிஸ்டன்(50). மீனவரான இவர், கடந்த 10 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் வீட்டை விட்டு வௌியே சென்றவர், புன்னக்காயலில் ராஜன் மகன் ரீஜான்சன் என்பவரது வீட்டில் கம்பியில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி செல்வம் கொடுத்த புகாரின் பேரில் ஏட்டு மாரிச்செல்வி வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரணை நடத்தி வருகிறார்.