தா.பழூர், மே 31: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கீழ மைக்கல் பட்டி பங்கு கோயிலில் உள்ள திருத்தலம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இத்தலத்தில் ஈஸ்டர் பெருவிழாவிற்கு பிறகு தேர் பவனி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு ஆடம்பர தேர்பவனி நடத்துவதற்கு ஊர் நாட்டாண்மைகள் பொதுமக்கள் ஏற்பாடு செய்தனர். அதன்படி கடந்த 20-ம் தேதி அருட்தந்தை விக்டர் பால்ராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி திருப்பலி, நவநாள் திருப்பலி, தவ நற்கருணை, ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.