காரைக்குடி, மே 27: காரைக்குடி அருகே திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானகிரி பங்கு அன்னைநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள புனித அந்தோணியார் ஆலய புனிதப்படுத்தும் விழா நடந்தது. பங்கு தந்தை அந்தோணிசாமி வரவேற்றார். சிவகங்கை மறைமாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடத்தி ஆலயத்தை புனிதப்படுத்தினார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், சிறுபான்மை மக்களுக்கு என்றும் பாதுகாவலராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். முத்திரை திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி நல்லாட்சிக்கு இலக்கணமாக திராவிட மாடல் அரசு செயலாற்றி வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மு.தென்னவன், காரைக்குடி மாநகராட்சி மேயர் எஸ்.முத்துத்துரை, துணைமேயர் நா.குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் குன்றக்குடி சுப்பிரமணியன், டாக்டர் ஆனந்த், முன்னாள் ஊராட்சி தலைவர் முருகப்பன், கலைஞர் தமிழ்ச்சங்க செயலாளர் பொறியாளர் செந்தில்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆரோக்கியசாமி, மாவட்ட வர்த்தக அணி சில்வர்ஸ்டார், மாவட்ட பிரதிநிதி சார்லஸ், காரைசுரேஷ் மற்றும் பங்குபணியாளர்கள், மானகிரி, தளக்காவூர் கிராம பொறுப்பாளர்கள், பங்கு இறைமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.