மணப்பாறை, ஜூன் 25: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் அரசு மதுபாட்டில்கள் கள்ள சந்தையில் விற்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து எஸ்ஐ தலைமையிலான போலீஸார் நேற்று தணிக்கை ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒத்தக்கடை பகுதியில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் சின்னகருப்பன் (65) என்பவரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அதேபோல், புத்தாநத்தம் தெற்குத்தெருவை சேர்ந்த மதியழகன் (55) மற்றும் இளையராஜா (42) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 120 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள புத்தாநத்தம் போலீசார், மூவரையும் நீதிமன்றத்த்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்தனர்.
புத்தாநத்தம் பகுதியில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 3 பேர் கைது
0
previous post