வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அரசு போக்குவரத்து கிளையை சேர்ந்த மலைப்பகுதி வாகன ஓட்டுநர்களுக்கு பயிற்சி வாகனம் மூலம் புத்தாக்க பயிற்சியளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பொதுமேலாளர் டேவிட் சாலோமன் தலைமை வகித்தார். குறுகலான மலைச்சாலையில் பாதுகாப்பாக ஓட்டுவது குறித்து தாண்டிக்குடி பகுதியில் பயிற்சியளிக்கப்பட்டது. மேலும் மலைப்பகுதியில் எவ்வாறு வாகனங்ளை இயக்க வேண்டும் என்றும், அதில் உள்ள இடர்பாடுகளை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது. இதில் கொடைக்கானல், பழநி, திண்டுக்கல், வத்தலக்குணடு, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நத்தம் பகுதியை சேர்ந்த 30 ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.