Tuesday, February 27, 2024
Home » புத்தகத்திருவிழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு கலை இலக்கிய திறனாய்வு போட்டி

புத்தகத்திருவிழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு கலை இலக்கிய திறனாய்வு போட்டி

by Ranjith

 

திருப்பூர், ஜன.8: 20 வது திருப்பூர் புத்தகத்திருவிழாவையொட்டி மாணவ, மாணவியர்களுக்கான கலை, இலக்கிய திறனாய்வு போட்டிகள் நேற்று நடந்தது. தமிழ்நாடு அரசு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் நடத்தும் 20வது திருப்பூர் புத்தகத்திருவிழா வருகிற 25ம் தேதி முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை காங்கயம் சாலை வேலன் ஹோட்டல் வளாகத்தில் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் புத்தகத்திருவிழாவையொட்டி மாணவ, மாணவியரின் கலை இலக்கிய திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி இந்த ஆண்டு மாணவ, மாணவியருக்கான கலை இலக்கிய திறனாய்வு போட்டிகள் நேற்று ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 26 இடங்களில் நடந்தது. இப்போட்டியில், அந்தந்த மையங்களில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.500, இரண்டாம் பரிசு ரூ.300, 3ம் பரிசு ரூ.200 ரொக்கம் வழங்கப்படும். அத்துடன் நினைவு பரிசுகளும் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவோருக்கு வருகிற 30ம் தேதி மாலை புத்தகத்திருவிழா வளாகத்தில் பரிசளிப்பு விழா நடைபெறும் என்று புத்தகத்திருவிழா ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

two × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi