விளாத்திகுளம்,ஆக.26: புதூர் அருகே பூதலாபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட கலையரங்க கட்டிடத்தை கனிமொழி எம்.பி. திறந்துவைத்தார். புதூர் ஊராட்சி ஒன்றியம், பூதலப்புரத்தில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கலையரங்க கட்டிடத்தின் திறப்பு விழா நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திமுக துணை பொதுச்செயலாளரான கனிமொழி எம்.பி., விழாவுக்கு தலைமை வகித்து புதிய கலையரங்க கட்டிடத்தை திறந்துவைத்தார்.
நிகழ்வில் புதூர் பிடிஓக்கள் சசிகுமார், வெங்கடாசலம், திமுக ஒன்றியச் செயலாளர்கள் புதூர் கிழக்கு செல்வராஜ், மத்தி ராதாகிருஷ்ணன், மேற்கு மும்மூர்த்தி, விளாத்திகுளம் மத்தி ராமசுப்பு, விளாத்திகுளம் பேரூர் செயலாளர் வேலுச்சாமி, பேரூராட்சி தலைவர் சூர்யா அய்யன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, இளைஞர் அணி தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் துணை அமைப்பாளர் இமானுவேல், பூதலப்புரம் பஞ். தலைவர் சக்திவேல், மாவட்டப் பிரதிநிதி ராமலிங்கம், தகவல் தொழில்நுட்ப அணி புதூர் கிழக்கு ஒன்றிய அமைப்பாளர்கள் காளிதாஸ், சுபாஷ், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய வக்கீல் அணி ஆகாஷ் பாண்டியன், தகவல் தொழில்நுட்ப அணி விளாத்திகுளம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் தர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் என ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.