நெய்வேலி, ஆக. 21: நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் சுதாகர் உத்தரவின் பேரில், போலீசார் நெய்வேலி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது என்எல்சி ஆர்ச்கேட் மற்றும் வடக்குத்து பகுதிகளில் பைக்கில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து நெய்வேலி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில், முத்தாண்டிகுப்பம் அடுத்த இளவத்தடி சுரேஷ்பாபு(40), வடக்குமேலூர் செட்டிகுளம் சண்முகவேல்(40) ஆகியோர் என்பதும், இவர்கள் இருவரும் புதுச்சேரி மதுபாட்டில்களை வாங்கி வந்து இப்பகுதியில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சுரேஷ்பாபு, சண்முகவேல் ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 47 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.