புதுச்சேரி, ஆக. 29: புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதனை கவர்னர் மாளிகையில் நடிகர் விஜய் சேதுபதி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். புதுவையில் சினிமா படப்பிடிப்பு மற்றும் விளம்பர படப்பிடிப்புகள் தினமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் புதிய படத்துக்கான படப்பிடிப்பு புதுச்சேரி பாரதி பூங்காவில் நேற்று காலை நடைபெற்றது. இதனால் நடிகர் விஜய் சேதுபதியை காண ரசிகர்கள் பாரதி பூங்கா முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் பாரதி பூங்கா எதிரே உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் கைலாஷ்நாதன் இருப்பதை அறிந்த விஜய்சேதுபதி உடனே கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் கைலாஷ்நாதனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
புதுவை கவர்னருடன் நடிகர் விஜய் சேதுபதி சந்திப்பு
previous post