புதுச்சேரி, ஜூன் 11: புதுச்சேரியில் கத்திரி ெவயில் முடிந்த பிறகும் வெப்ப அலையுடன் வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த ஜூன் 1ம் தேதி முதல் தினமும் 99 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. இதில் 4 நாட்கள் வெயில் சதம் அடித்துள்ளது. மேலும், நடப்பாண்டிலேயே அதிகபட்சமாக கடந்த 8ம் தேதி 104 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி இருந்தது. இந்நிலையில் நேற்று கூட 99 டிகிரியாக வெயில் கொளுத்தியது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெப்ப அலையும் வீசியது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகினர். வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு ஜூன் முதல் வாரம் வரை அல்லது 2வது வாரம் வரை கோடை விடுமுறை நீடிக்கப்படும். ஆனால், இந்தாண்டு கோடை விடுமுறை நீட்டிக்கப்படாததால் தொடக்கப்பள்ளி வரை பயிலும் மாணவ, மாணவிகள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
புதுவையில் 99 டிகிரி வெயில்
0