புதுச்சேரி, நவ. 4: புதுச்சேரியில் ரூ.6 லட்சம் மதிப்பிலான 11 மோட்டார் பைக்குகளை திருடிய கடலூரை சேர்ந்த பிரபல பைக் திருடனை பெரியகடை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். புதுச்சேரி கிழக்கு பகுதி குற்றப்பிரிவு போலீசார், பாரதி பூங்கா பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வாலிபர் ஒருவர், ைபக்கில் அமர்ந்திருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது, அவர் கடலூர் மாவட்டம், கம்பளிமேடு, மாந்தோப்பு, ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த அப்பு (25) என்பதும், பிரபல பைக் திருடன் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை பெரியகடை காவல்நிலையம் அழைத்து வந்த போலீசார் அதிரடியாக விசாரித்தனர். அப்போது புதுச்சேரி நகர பகுதியில் 11 பைக்குகளை திருடிய அப்பு, கடலூர் பகுதியில் அவற்றை விற்றிருப்பதாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரை கடலூர் அழைத்து சென்ற போலீசார், அப்பு கொடுத்த தகவலின் பேரில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள மொத்தம் 11 பைக்குகளை பெரியகடை போலீசார் அங்கிருந்து பறிமுதல் செய்தனர். அதன்பிறகு அப்பு மீது பைக் திருட்டு பிரிவில் வழக்குப்பதிந்த போலீசார், அவரை கைது செய்தனர். பின்னர் அவர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.