புதுச்சேரி: புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் மிகுந்த மன உளைச்சலை தருகிறது என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநில அந்தஸ்தை பலமுறை கேட்டும் ஒன்றிய அரசு கொடுப்பது போல தெரியவில்லை என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் யாருக்காவது செய்து தரவேண்டும் என்றால் முடியவில்லை, தினமும் மனஉளைச்சல்தான் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேதனை தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் உச்சநீதிமன்ற உத்தரவு தெளிவாக சொன்னபிறகு நமக்கு மரியாதையே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.இதுகுறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறுகையில்; ‘புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை செயல்படுத்தக்கூடாது என அதிகாரிகள் உள்ளனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் நிர்வாகம் செய்வதில் சிரமம் உள்ளது என ஆள்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.ரங்கசாமிக்கு அதிகாரம் வேண்டும் என்பதால் மாநில அந்தஸ்து கேட்பதாக சிலர் கேலி செய்கின்றனர். புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருபவர்களுக்கு சிரமம் இருக்கக்கூடாது என்பதால் மாநில அந்தஸ்து கேட்கிறேன்’ என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்….