மயிலம், ஜூன் 5: மயிலம் அடுத்துள்ள பெரும்பாக்கம் சோதனை சாவடி அருகே மயிலம் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது செஞ்சி அடுத்த மேல்எடையாளம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுப்ரமணி மகன் சுபாஷ்(26) புதுச்சேரியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை நிறுத்தி விசாரணை செய்ததில் தமிழகத்தில் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட புதுச்சேரி மதுபாட்டில்களை இருசக்கர வாகனத்தில் பதுக்கி வைத்து கடத்தியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்திய குற்றத்திற்காக மயிலம் போலீசார் குற்றவாளியை கைது செய்து அவர் கடத்தி வந்த 48 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது
0
previous post