நாகப்பட்டினம்,ஆக.30: புதுச்சேரி கடற்கரையில் நடந்த தென்னிந்திய அளவிலான கடல் நீச்சல் போட்டியில் நாகப்பட்டினம் மாவட்டம் சார்பில் வெற்றி பெற்ற வீரர்களை கலெக்டர் ஆகாஷ் பாராட்டினார்.
கடந்த 25ம் தேதி புதுச்சேரி கடற்கரையில் தென்னிந்திய அளவில் கடல் நீச்சல் போட்டி நடந்தது. இதில் நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டரங்கில் பயிற்சி பெற்ற 7 வீரர்கள் மற்றும் 1 வீராங்கனை நாகப்பட்டினம் மாவட்டம் சார்பில் கலந்து கொண்டனர்.
இதில் 2 தங்கப்பதக்கம், 3 வெள்ளிப்பதக்கம், 2 வெண்கலப்பதக்கம் பெற்று நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர். தென்னிந்திய அளவில் பதக்கங்கள் பெற்ற வீரர்கள் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரை சந்தித்தனர். அவர்களை கலெக்டர் ஆகாஷ் பாராட்டினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன், நீச்சல் பயிற்றுநர் சபரிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.