புதுக்கோட்டை, ஆக.4: டிஏபி உரத்திற்குப் பதிலாக விலை குறைவாக உள்ள சூப்பர் பாஸ்பேட் உரத்தை விவசாயிகள் பயன்படுத்தலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். சூப்பர் பாஸ்பேட் உரத்தில் 16 சதவீதம் மணிச்சத்துமற்றும் சல்பர், கால்சியம் போன்ற நுண்ணூட்ட சத்துக்கள்சிறிதளவு உள்ளன. சூப்பர் பாஸ்பேட் உரம் உள்நாட்டிலேயேதயார் செய்யப்பட்டு எளிதில் கிடைக்கிறது. சூப்பர் பாஸ்பேட்உரத்தின் மூலம் பயிர்களுக்கு கால்சியம் மற்றும் சல்பர் சத்துகூடுதலாகக் கிடைக்கிறது. மேலும் நீரில் கரையும் மணிச்சத்துகிடைப்பதால் பயிரின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. நிலக்கடலை மற்றும் எள் போன்ற எண்ணெய்வித்துப் பயிர்களுக்கு சல்பர் அதிகம் தேவைப்படுவதால் சூப்பர்பாஸ்பேட் பயன்படுத்துவதன் மூலம் அதிக எண்ணெய்ச்சத்துடன், எண்ணெய்ச்சத்துப் பயிர்களின்மகசூல் அதிகரிக்கிறது. சூப்பர் பாஸ்பேட்டில் உள்ள பாஸ்பேட் எளிதில் கரையும்உரம் என்பதால் சூப்பர் பாஸ்பேட் எனப் பெயர் பெற்றுள்ளது.
எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தாங்கள்சாகுபடி செய்துள்ள கரும்பு, எண்ணெய்வித்துப் பயிர்களான தென்னை மற்றும் நிலக்கடலை, தோட்டக்கலைப்பயிர்களுக்குத் தேவைப்படும் சூப்பர் பாஸ்பேட் உரத்தினை வாங்கிப் பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வளர்ந்த தென்னை மரம் ஒன்றிற்கு யூரியா 1.2 கிலோகிராம், சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ கிராம், பொட்டாஷ் 2 கிலோகிராம் என்ற அளவில் நேரடி உரங்களைப் பயன்படுத்துவதால்உரப் பயன்பாடு அதிகரிக்கிறது. மேலும், விவசாயிகள் சாகுபடிக்கு முன்னதாக ஒருஏக்கருக்கு 300 கிலோ கிராம் மட்கிய தொழு உரத்துடன்பரிந்துரைக்கப்பட்ட சூப்பர் பாஸ்பேட் உரத்தினைக் கலந்து 30 நாட்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர் அதனை அடியுரமாகபயிர் சாகுபடிக்கு முன் இடுவதனால் மணிச்சத்தின் பயன்பாடுஅதிகரிக்கிறது. மேலும், பயிர்கள் வறட்சியை தாங்கிவளரும் தன்மையை பெறுகிறது. விவசாயிகள் பாஸ்போபாக்டீரியா என்னும் உயிர் உரத்தை பயன்படுத்துவதன் மூலம்மண்ணில் கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்தினை கரைத்துபயிர்களுக்கு வழங்கிடலாம். எனவே விவசாயிகள் டி.ஏ.பி. உரத்திற்குப் பதில் விலைகுறைவான சூப்பர் பாஸ்பேட் உரத்தினைப் பயன்படுத்தலாம்.
இத் தகவலை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.