புதுக்கோட்டை,நவ.5: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் திருகட்டளையை சேர்ந்த செல்வம் என்று குரைக்கை செல்வம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 22 வருடங்களாக தவறான நபர்களின் பழக்க வழக்கங்களால் குற்றச்சம்வங்களில் ஈடுபட்டேன்.
இதனால் குடும்பத்தினர் மிகுந்த பாதிப்பு அடைந்தனர். இந்நிலையில் தற்பொழுது குடும்ப சூழ்நிலையையும் குழந்தைகளின் நலன் கருதி திருந்தி வாழ இருப்பதாகவும் இனிமேல் குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டேன். மேலும் என் மீது வழக்குகளை முறையாக நீதிமன்றதில் ஆஜராகி முடித்து கொள்கிறேன். திருந்தி வாழ எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.