புதுக்கோட்டை,ஆக.26: புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் ஊரகப்பகுதிகளில் 11.7.2024 முதல் 10.9.2024 வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து பயனடையலாம்.
இம்முகாம் நாளை (27ம்தேதி) திருமயம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பனையூர் குழாலாசமுதாயக் கூடத்திலும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், நாகுடி ஊராட்சி, நாகுடி ஆர்.ஆர்.பி. டீலக்ஸ் மஹாலிலும், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், நம்பம்பட்டி சமுதாயக்கூடத்திலும் முகாம்கள் நடைபெற உள்ளது.
மேற்கண்ட முகாம்களில் பொதுமக்கள் தங்களதுகோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். இந்த தகவலை கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.