புதுக்கோட்டை, ஆக.21: புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (22ம்தேதி) மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் ஊரகப்பகுதிகளில் 11.7.2024 முதல் 10.9.2024 வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களைஅளித்து பயனடையலாம்.
இம்முகாம் நாளை (22ம்தேதி) அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், அரசர்குளம் கீழ்பாதி, வசந்தம் திருமண மஹாலிலும், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கல்லாலன்குடி, வசந்த கந்தசாமி மண்டபத்திலும், குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம், கண்ணன்குடி, மாரியம்மன் கோவில் முன்புறம் உள்ள மைதானத்திலும் முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். இந்த தகவலை கலெக்டர் அருணா, தெரிவித்துள்ளார்.