புதுக்கோட்டை, ஜூலை 7: புதுக்கோட்டை இருதய ஆண்டவர் ஆலய தேர் பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று கூட்டு திருப்பலியில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மார்த்தாண்டபுரத்தில் உள்ள இருதய ஆண்டவர் ஆலய இயேசுவின் திரு இருதய பெருவிழா மற்றும் புனித மரியாவின் மாசற்ற இருதய திருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்றைய தினம் கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் முன்னிலையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கொடியேற்று விழாவில் பங்கேற்று கூட்டு திருப்பலியில் ஈடுபட்டனர். அன்று முதல் தினமும் கூட்டு திருப்பலிகள் நடைபெற்றது. ஒன்பதாம் நாள் கூட்டு திருப்பலியுடன் தேர் பவனி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வேலூர் மறைமாவட்ட ஆயர் தலைமையில் தேர்பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆலயத்தை சுற்றி நடைபெற்ற தேர் பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபட்டனர்.