புதுக்கோட்டை, ஆக.3: புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோவில்பட்டியில் உள்ள மகா திரிசூல பிடாரியம்மன் கோயிலில் மூன்றாவது ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஒரு டன் அளவிலான சாத்துக்குடி, ஆப்பிள், தர்பூசணி, அன்னாசி, மாதுளை உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்களில் அலங்காரம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆடி மாதம் பிறந்தாலே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையான நேற்று புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோவில்பட்டியில் உள்ள மகா திரிசூல பிடாரியம்மன் கோயிலில் ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு பிடாரி அம்மனுக்கு ஆப்பிள், அன்னாசி, தர்பூசணி, மாம்பழம், கொய்யாப்பழம், மாதுளம் பழம், எலுமிச்சை பழம் உள்ளிட்ட ஒரு டன் அளவிலான பழங்களால் பிடாரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டு ஒரு டன் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ள பிடாரி அம்மனை சாமி தரிசனம் செய்தனர்.