பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேவார்ப்பட்டு சூலப்பிடாரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பெரியகண்மாயில் ஊர்பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக மஞ்சுவிரட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 1,000 காளைகள் பெரிய கண்மாயை சுற்றிலும் ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்ற போது காளைகள் முட்டியதில் 5 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து பார்வையாளர் பகுதிக்குள் புகுந்த ஒரு காளை, திருமயம் கண்ணனூர் புதுவயல் பகுதியை சேர்ந்த சிவா (25) என்பவரை முட்டி தள்ளியது. படுகாயமடைந்த அவர் பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர் நாளை (21ம்தேதி) சிங்கப்பூர் செல்ல இருந்தது குறிப்பிடத்தக்கது. சேலத்தில் காளை பலி: சேலம் தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா நேற்று நடந்தது. இதில் 525 காளைகள் வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்தது. இதனை 201 மாடுபிடி வீரர்கள் அடக்கினர். அப்போது காளைகள் முட்டியதில் 26 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தம்மம்பட்டி அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரது காளை, வாடிவாசல் வழியே வந்தபோது பக்கவாட்டு தடுப்பில் ேமாதி கீழே விழுந்து இறந்தது….