புதுக்கோட்டை, மே 24: புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் நல்ல முறையில் அளிக்கப்படுகிறதா எனவும், சி.டி.ஸ்கேன் பிரிவு மற்றும் மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வுகளில், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பார்த்தசாரதி, மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.