புதுக்கோட்டை, மார்ச் 14: புதுக்கோட்டை அஞ்சல் கோட்டம், இந்திய அஞ்சல் துறையில் தமிழ்நாடு அஞ்சல் வட்ட அளவில் கடந்த நிதியாண்டு 2023-24-ல், விரைவு தபால் பதிவு செய்தல் வழியாக வருவாய் ரூ.1.23 கோடி ஈட்டியுள்ளது. இந்திய அஞ்சல் துறை பாஸ் புக், 50917 கணக்குகள் ஆரம்பிக்கபட்டதன் மூலமாக அதிகப்படியான வருவாய் ஈட்டியுள்ளது. புதுக்கோட்டை அஞ்சல் கோட்டத்திற்க்கு, தமிழ்நாடு அஞ்சல் துறைத் தலைவர் விருது வழங்கினார். புதுக்கோட்டை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் முருகேசன் விருதினை பெற்றுகொண்டார்.